இந்தியா, பிப்ரவரி 28 -- நான் நினைத்தால் கலெக்டர், எஸ்.பியை கூட மாற்ற முடியும்; எல்லோருமே எனக்கு கீழேதான் என தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மசெல்வன் பேசியதாக சமூகவலைத்தளகளில் வைரல் ஆகி வருகிறது.

தருமபுரியில் திமுக இரண்டு மாவட்டமாக பிரிக்கப்பட்டு உள்ளது. தருமபுரி கிழக்கு மாவட்டத்திற்குள் தருமபுரி, பென்னாகரம் ஆகிய 2 தொகுதிகளும், தருமபுரி மேற்கு மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாலக்கோடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன.

இந்த நிலையில் கடந்த தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த தடங்கம் சுப்பிரமணியிடம் இருந்து அப்பொறுப்பு பறிக்கப்பட்டு தர்மசெல்வனுக்கு வழங்கப்பட்டது. இதன் பின்னர் தருமபுரி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தர்ம செல்வன் பேசிய ஆடியோவை அங்கிருந்தவர்கள் ரெக்கார்ட் செய்து வெளியிட்டு உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வ...