இந்தியா, ஜூன் 17 -- நிவின் பாலியின் சூப்பர் ஹிட் திரைப்படமான பிரேமம் படத்தில் நடித்து திரைத்துறைக்கு ப்ரீட்சையமான அனுபமா தமிழ், தெலுங்கு திரைத்துறைகளில் பிரபலமானாலும் மலையாளத்தில் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமே 3 படங்களில்தான் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது அவர் சுரேஷ் கோபியின் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா (ஜே.எஸ்.கே) படத்தில் நடித்து மீண்டும் மலையாளத்தில் ரீ என் ட்ரி கொடுக்க இருக்கிறார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் (ஜூன் 16) கொச்சியில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அனுபமா பரமேஸ்வரன், ' என்னால் நடிக்க முடியாது என்று நிறைய பேர் என்னை ட்ரோல் செய்தனர்.

அதையெல்லாம் மீறி இந்த படத்தின் இயக்குநர் (பிரவீன் நாராயணன்) என்னை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க...