இந்தியா, மார்ச் 22 -- நடிகை பூஜா ஹெக்டேவின் உடல் வடிவம், அவரது சிரிப்பு, அவரது உடை அணியும் நேர்த்தி ஆகியவற்றுக்காக இந்திய முழுக்க பிரபலமானவர். இவர் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிகளிலும் நடித்து பிரபலமானவர்.

குறிப்பாக, விஜய், சல்மான் கான், பிரபாஸ், ஹிருத்திக் ரோஷன் போன்ற இந்திய அளவில் பிரபலமான நடிகர்களுடன் ஜோடியாக நடித்து இருக்கிறார்.

சமீபத்தில், பூஜா ஹெக்டே தன்னைப் பற்றி வரும் எதிர்மறை கருத்துகளுக்கும் ட்ரோல்களுக்கும் ஒரு நேர்காணல் மூலம் பதிலளித்துள்ளார்.

அதில் பொழுதுபோக்கு துறையில் உள்ளவர்களை அவமானப்படுத்த லட்சக்கணக்கான ரூபாய்களை சிலர் செலவழிக்கிறார்கள் என்று நடிகை பூஜா ஹெக்டே வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், இந்த எதிர்மறையான கருத்துகளைப் பரப்பும் விளையாட்டு தனக்கு அதிர்ச்சியாக ...