இந்தியா, மார்ச் 28 -- சோசியல் மீடியாவில் லட்சுமி பொட்டிக் என்னும் சமூக வலைதளப்பக்கம் மூலம் சேலை விற்பனையைத் தொடங்கியவர், ஆனந்தி பிரகாஷ். தற்போது தனி இணையதளம் மூலம் இந்த தொழிலை செய்துவருகிறார். இந்நிலையில், இவரது ஒவ்வொரு சேலை புரொமோஷன் வீடியோக்களுக்கும் சேலைக்காக மட்டுமல்லாது, அவரது நடிப்புக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

இந்நிலையில் ஆனந்தி பிரகாஷிடம், கலாட்டா தமிழ் யூடியூப் சேனல் நடத்திய நேர்காணல் கடந்த மார்ச் 15,16ஆம் தேதி வெளியானது. அதன் தொகுப்பினைக் காணலாம்.

எனக்குப் பணம் போதும்ன்னு சொல்ற அளவுக்கு இருக்கு. ஒரு பையன். நல்ல ஃபேமிலி. நான் ஃபேமிலி மெம்பர்ஸோட தான் இருக்கேன். எனக்கு மக்கள் கொடுத்ததைத் தக்கவைச்சிக்கிட்டாலே போதும். எனக்கு யார்மேலும் பொறாமை இல்லை. நான் என்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் என்னுடைய கஷ்டங்களைக் காட்டியது இல...