இந்தியா, ஏப்ரல் 21 -- ராஜ்யசபா உறுப்பினர் பதவி மீண்டும் தனக்கு வழங்கப்படாவிட்டாலும், திமுகவையோ அல்லது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையோ விமர்சிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என மதிமுக தொண்டர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் படிக்க:- 'எடப்பாடியின் உள்ளம் ஒரு போதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக சிந்திக்காது!' தவாக வேல்முருகன் உருக்கம்!

கடந்த ஏப்ரல் 12 அன்று நடைபெற்ற மதிமுக தொழிற்சங்க பொதுக்குழு கூட்டத்தில் பேசிய வைகோ, "ஒரு மாதத்திற்குள் ராஜ்யசபா சீட் அறிவிப்பு வரும்போது, திரும்பவும் தேர்ந்தெடுக்கப்படும் பட்டியலில் என் பெயர் ஒருவேளை இல்லாவிட்டாலும், எந்த பதிவும் திமுகவை தாக்கியோ, முதலமைச்சரை விமர்சித்தோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செய்யக் கூடாது என்பதை சத்திய பிரமாணமாக நீங்கள் மனதிற்குள் உறுதிப்படு...