Hyderabad, மே 1 -- நானி நடித்த ஹிட் 3 வியாழக்கிழமையான இன்றைய தினம் (மே 1) திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதை சமூக வலைதளங்களின் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது.

ஹிட் படத்தின் முதல் பாகத்தில் விஸ்வாக் சென்னும், 2-ம் பாகத்தில் ஆத்வி சேஷூம் கதாநாயகனாக நடித்த நிலையில், 3-ம் பாகத்தில் நானி நடித்திருக்கிறார்.

தற்போது 4-ம் பாகத்தில் கார்த்தி நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பு 3 பாகத்தில் இறுதியில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இறுதியில் ஏசிபி வீரப்பனாக வரும் கார்த்தி எனக்கும் தெலுங்கு தெரியும் என்கிறார். கார்த்திக்கு தமிழில் பெரிய மார்க்கெட் இருப்பதால் ஹிட் 4 பாகம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | வைலன்ஸ்..வைலன்ஸ்..வைலன்ஸ்.. நானி ஆக்‌ஷன் அவதாரம் வொர்க் அவ...