இந்தியா, ஏப்ரல் 7 -- "எனக்கும் சீமான் அண்ணனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் தேசியத்தில் தமிழைப் பார்க்கிறேன்; அவர் தமிழில் தேசியத்தைப் பார்க்கிறார்" என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற "சொல் தமிழா சொல்" என்ற பேச்சுப் போட்டி நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை "போர்களத்தில் நிற்கும் தளபதி" என்று புகழ்ந்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் இருவரும் ஒரே மேடையில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணாமலை தனது பேச்சில், "அண்ணன் சீமான் அவர்களைப் பற்றி நான் என்ன பேசுவது? ஒரு அரசியல் தலைவர், ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று சொல்வதை விட, ஒரு போர்க்களத்தில் நிற்கும் தளபதியாகவே அவரைப் பார்க்கிறேன். அவரது கொள்கைய...