இந்தியா, ஏப்ரல் 22 -- விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் சாம் விஷால். தான் பாடிய பாடல்கள் மூலம் பல தரப்பட்ட ரசிகர்களை கவர்ந்த அவருக்கு, அடுத்தடுத்து மேடை அமைத்துக்கொடுத்தது விஜய் டிவி.அதனை கனகச்சிதமாக பயன்படுத்திய சாமுக்கு தற்போது கிடைத்திருக்கும் மேடை 'சாமோடு விளையாடு.'இந்த நிகழ்ச்சி குறித்தான அனுபவங்களையும், இன்ன பிற விஷயங்கள் குறித்தும் அவரோடு பேசினேன்.

நான் பாட்டு பாடணும்னு மட்டும்தான் நினைச்சிருந்தேன். ஆனா கடவுள், நீ ஆங்கரிங்கும் பண்ணு. இது மூலமா இன்னும் மக்கள சம்பாதின்னு கொடுத்த வாய்ப்பாதான் 'சாமோடு விளையாடு' வாய்ப்ப பாக்குறேன். நிச்சயமா எனக்கு இது பெரிய ஆசீர்வாதம். கல்லூரி படிக்கும் போதிலிருந்தே எந்த ஒரு மேடை கிடைச்சாலும், அத ஒழுங்கா யூஸ் பண்ணனும் அப்படிங்கிற எண்ணம் இருக்கும்.

HT TAMIL EXC...