இந்தியா, மே 14 -- யூடியூபர் ஜி.பி.முத்துவின் வீடு அவரது சொந்த ஊர் மக்களால் முற்றுகையிடப்பட்டது. ஜி.பி. முத்து தனது சொந்த ஊரான உடன்குடி, கீழத்தெருவை காணவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்த நிலையில், ஜி.பி.முத்து கொடுத்திருக்கும் புகாருக்கு எதிராக அவ்வூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கூச்சலிட்டனர். இதனால் அவ்விடத்தில் போலீசார் குவிந்து நிலைமையை சரிசெய்தனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய யூடியூபர் ஜி.பி.முத்து, '' தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பெருமாள் புரத்தில், என்ன அநியாயம் நடக்குது பார்த்தீங்களா?

தெருவை ஆக்கிரமிச்சிருக்காங்க. அவ்வளவு மோசமாகப் பண்றாங்க. எனக்கு இங்கு பூர்வீகமான வீடு இருக்கு. கோயிலை, தெருவை ஆக்கிரமிச்சுக் கட்டுறாங்க. கேட்கப்போனால் பிஜேபியில் இருந்து ஆளைக் கூட்டிட்டு வர்றாங்க. நான் கட்சியெல்லாம் எதிர்ப...