இந்தியா, மார்ச் 8 -- அதிமுகவை பொறுத்தவரை எந்த கட்சியின் கூட்டணிக்காகவும் தவம் கிடந்த சரித்திரம் கிடையாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

மகளிர் தினத்தையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மகளிர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பாஜக உடன் கூட்டணி வைப்பதற்காக பலர் தவம் கிடப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அவர் அதிமுகவை குறிப்பிட்டாரா? தவறாக பேச வேண்டாம். அப்படி யாரும் சொல்லவில்லை, தவறாக சொல்லாதீர்கள். 6 மாதம் கழித்து கூட்டணி பற்றி பேசப்படும் என தெளிவுப்படுத்திவிடேன். அதிமுகவை பொறு...