இந்தியா, ஏப்ரல் 25 -- அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையினர் ஆய்வு செய்தனர். இறுதியில் அது புரளி என்பது உறுதியானது.

சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈ-மெயில் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை செய்தனர். அதனைத் தொடர்ந்து அந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதும் சோதனையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க: 'பணியிடங்கள் இருந்தும் நிரப்பாமல் வஞ்சிக்காதீர்கள்' முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

ஈமெயில் மூலம் ஏற்கனவே இ...