இந்தியா, ஏப்ரல் 21 -- எடப்பாடி பழனிசாமியை பாஜக மிரட்டி கூட்டணி வைத்துக் கொண்டாலும் அவரது உள்ளம் ஒருபோதும் தமிழ்நாட்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக சிந்திக்காது என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்து உள்ளார்.

கிருஷ்ணகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தவாக தலைவர் தி.வேல்முருகன், "எடப்பாடியை சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறையை அனுப்பி கூட்டணிக்கு சம்மதிக்க வைத்தாலும், ஒரு காலமும் தமிழ்நாட்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக அவரது உள்ளம் சிந்திக்காது" என பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவேரி ஆற்று நீர் உரிமை மற்றும் தமிழர்களின் உரிமைகள் குறித்து கருத்து தெரிவித்தார். காவேரி ஆறு தமிழர்களுக்கு உரிமையானது என்றும், 15,000 ஆண்டுகளுக்கு முன்பே குடகு மலையில் உற்பத்தியாகி பாய்ந்து வருவதாகவும் அவர் கூறினார். உலக நீ...