இந்தியா, ஏப்ரல் 24 -- தங்களுக்கு உயிர்ப் பயம் வந்திடுச்சு என காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய சுற்றுலாப் பயணிகள் பேட்டியளித்தனர்.

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய சுற்றுலாப் பயணிகள் சென்னை விமானநிலையத்தில் பேட்டியளித்தனர். அப்போது முதலில் பேசிய ஒரு நடுத்தரவயதுடைய பெண், ''காஷ்மீருக்கு சுற்றுலா போகும்போது ரொம்ப சந்தோஷமாகத் தான் போனோம். இந்த செய்தி கேட்டதில் இருந்து பதற்றமாக இருந்தது. ஹெல்ப் லைன் மூலம் எங்களைத் தொடர்புகொண்டாங்க. அங்கிருந்து சென்னை வரும் வரை எங்களுக்கு முழு சப்போர்ட் கொடுத்துருக்காங்க. மதுரைக்கும் டிராப் பண்ணும்வரை வேன் ஏற்பாடு செய்து கொடுத்து இருக்காங்க'' என நடந்ததைச் சொன்னார்.

மேலும் படிக்க: 'மயோனைஸைக்கு ஓராண்டு காலம் தடை' - உற்பத்தி செய்ய சேமிக்க விற்கவும் தமிழ்நாடு அரசு தடைவிதிப்பு!

அதன்பின் பேசிய ஒரு குடும்பத்தல...