சென்னை, செப்டம்பர் 9 -- வெளிநாட்டு சுற்றுப் பயணம் செல்லும் முன்பு 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 10.62 லட்சம்கோடி முதலீடுசெய்து 32.81 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கிவிட்டதாகவும், தமிழக இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பை பெற்றுவிட்டது போலவும் மார் தட்டும் பொம்மை முதலமைச்சர், முழு விவரங்களையும் தைரியமாக வெளியிடத் தயாரா? என்று எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''2021, தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது சுமார் 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளித்துவிட்டு, தற்போது 90 சதவீதம் நிறைவேற்றிவிட்டோம், 95 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்று மேடைதோறும் பச்சைப் பொய் பேசி, மக்களின் காதுகளில் பூச்சூடி வரும் விடியா திமுக ஸ்டாலின...