இந்தியா, ஜூலை 10 -- "உள்ளாட்சியில் நல்லாட்சியா? திமுக குடும்பத்தின் கோர ஆட்சியா?" திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் "நல்லாட்சி" என்பது வெறும் வாய்ச்சொல் வீரமாகவே உள்ளது என்றும், திமுக ஆட்சி குடும்ப நலனுக்காகச் செயல்பட்டு மக்களிடம் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக, மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்து வரி முறைகேடு, திமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகள் குடும்பத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு, ஊழல் கோரத்தாண்டவம் ஆடுவதன் அப்பட்டமான உதாரணம் என அவர் சாடியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பில் மிகப் பெரிய ஊழல் ம...