இந்தியா, மே 25 -- 'உதவி இயக்குநராக வாய்ப்பு தராமல் பீர் குடித்த இயக்குநர் மகேந்திரன் பற்றியும், தன் முதல் ஸ்கிரீன்பிளேவை கிண்டலடித்த பாரதிராஜா பற்றியும் இயக்குநர் மணிரத்னம், தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் நினைவுகூர்ந்தார்.

தக் லைஃப் இசை வெளியீட்டு விழா மேடையில் பேசிய இயக்குநர் மணி ரத்னம், ''நான் நன்றி சொல்லணும்னு நினைச்சால் கே.பாலச்சந்தர்கிட்டேயிருந்து ஆரம்பிக்கணும். நானும் சினிமாவுக்குள் வர காரணமாக இருந்தவர் கே.பாலச்சந்தர் தான். அதைத்தாண்டி எனக்கு முதல் படம் கொடுத்த வீனஸ் கிருஷ்ணமூர்த்தி. தமிழில் எனக்கு முதல் படம் கொடுத்த சத்யஜோதி தியாகு சார். மெளனராகம் கொடுத்த வெங்கடேஷ். இந்த விழாவின் நாயகனான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சார்.

நீங்க பண்ணிய மெலடி கேட்டேன். இவ்வளவு மெலடி கொடுத்திருக்கீங்க. ரொம்ப நன்றி. அவர்கிட்ட இப்போது ஆடியன்...