இந்தியா, ஏப்ரல் 30 -- திமுக சார்பில், மனிதநேய விழா என்ற பெயரில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், அண்மையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் யோகிபாபு கலந்து கொண்டு பேசினார்.

மேலும் படிக்க | Love Ink: காமெடி சரவெடி.. யோகிபாபு, ரவிமரியா,ராமர்.. 3 காமெடியன்கள் கூடும் படம்! - முழு விபரம் உள்ளே!

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும் பொழுது, 'நான் இசை வெளியீட்டு விழா மேடைகளில் ஏறி இருக்கிறேன். முதன்முறையாக சேகர்பாபு அண்ணன் என்னை அரசியல் மேடை ஏற்றிருக்கிறார். அவருக்கு நான் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வருக்கு பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லோரும் வாழ்த்துக்களை சொல்லலாம்.

அந்த இடத்தில் ஒரு சிறிய காமெடியனான என்னையும் அழைத்து நீ வந்து முதல்வருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு போ ...