சென்னை,கோவை,ஊட்டி,உதகை, ஏப்ரல் 25 -- உதகையில் நடந்த பல்கலைகழக துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க இருந்த துணை வேந்தர்களை, முதல்வர் ஸ்டாலின் உத்தரவில் போலீசார் மிரட்டியதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அத்துடன், மாநாட்டில் அது தொடர்பாக பேசியிருந்தார். இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

மேலும் படிக்க | 'செங்கோட்டையன் எண்ட்ரி.. 2026 நமக்கே.. உற்சாகப்படுத்திய இபிஎஸ்' மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

"துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என அரசு பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்'' எனச் சொல்லியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள். இதற்கு முன்பு ஆளுநர் ரவி கூட்டிய துணை வேந...