இந்தியா, மே 7 -- ரெட்ரோ படத்தில் தம்மம் என்ற வார்த்தை இடம் பெற்று இருக்கும். அதற்கு வாழ்க்கை நோக்கம் என்பது அர்த்தமாம். இந்த நிலையில் ரெட்ரோ படம் தொடர்பாக சூர்யா கொடுத்த நேர்காணலில் தன்னுடைய வாழ்க்கையின் தம்மம் என்ன என்பது குறித்து அவர் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, 'நீங்கள் உங்களுக்கு கிடைத்தவற்றுக்கு எவ்வளவு நன்றியோடு இருக்கிறீர்கள் என்பதில் தான் மகிழ்ச்சி இருக்கிறது. நம்முடைய அம்மா,அப்பா எப்படி இருக்கிறார்கள், நம் குழந்தைகள் எவ்வாறான வாழ்க்கையை பெற்றிருக்கிறார்கள் என்பதையெல்லாம் பார்க்க வேண்டி இருக்கிறது.

நான் பெரிதாக இந்த வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை பற்றி எல்லாம் யோசித்தது கிடையாது. ஆனால், ரெட்ரோ கதையில் தம்மம் என்ற வார்த்தையை கேட்ட பொழுது, எனக்கு அது மிகவும் புதிதாக இருந்தது. நாம் கெரியரை பார்த்துக் கொள்ளப் ...