இந்தியா, ஏப்ரல் 29 -- சிக்கந்தர் படத்தின் புரொமோஷனின் போது, தென்னிந்திய பார்வையாளர்கள் இந்தி படங்களை திரையரங்குகளில் பார்ப்பதில்லை என்றும் ஆனால் இந்தி பார்வையாளர்கள் தென்னிந்திய நடிகர்களின் படங்களை பார்க்கிறார்கள் என்றும் சல்மான் கான் பேசினார். இதற்கு நடிகர் நானி பதிலடி கொடுத்திருக்கிறார்.

மே 1 அன்று வெளியாக இருக்கும் ஹிட் 3 பட ப்ரோமோஷ்னின் ஒரு பகுதியாக டி.என்.ஏ இந்தியாவுடனான உரையாடலில், நானி சல்மானின் கருத்தை மறுத்து, சல்மானின் படங்கள் தெற்கில் கலாச்சார ரீதியாக எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை எடுத்து பேசினார்.

தென்னிந்தியாவில் பாலிவுட்டுக்கு முக்கியத்துவம் இல்லாதது குறித்து நானியிடம் கேட்டபோது, "அது (இந்தி சினிமா) ஒரிஜினல். தென்னிந்திய சினிமா பின்னர் வந்ததுதான். தென்னிந்திய சினிமாவுக்கு இப்போது கிடைக்கும் அன்பு சமீபத்தில் கிடைத...