இந்தியா, பிப்ரவரி 24 -- சென்னையில் வசிக்கும் உங்கள் மனைவி தர்மபுரியில் போட்டியிடலாம்; நான் மயிலாடுதுறையில் போட்டியிடக் கூடாதா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்க்கு காங்கிரஸ் எம்.பி. சுதா கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 23 ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசும் போது, நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. அவற்றையெல்லாம் பேசுவதை விட்டு விட்டு, தேவையில்லாமல் என்னைப் பற்றி பேசும் போது, இந்த தொகுதிக்கு சம்மந்தமில்லாத சென்னையிலிருந்து யாரோ ஒருவர், எங்கிருந்தோ வந்தார் என்றும், தெரியாமல் வாக்களித்து வெற்றி பெறச் செய்தீர்கள் என்றும் பேசியது, தொடர்ந்து சமுதாய மக்களால் தோற்கடிக்கப்படுகின்ற உங்கள் விரக்தியையும், வயிற்றெரிச்சலையும் உணர முடிகிறது.

ஒரு பெண் என்றும் பாராமல் பொதுவ...