இந்தியா, ஜூலை 16 -- தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற, ஊரகப்பகுதிகளில் முகாம் நடத்தி மக்களிடமிருந்து மனுக்களை பெற்று குறைகளுக்கு தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடலூரில் வைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து இந்த திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். திமுக தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடாக இந்த திட்டம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "தமிழ்நாட்டின் ஆளும் கட்சியால் கதை வசனம் எழுதப்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற மோசடி நாடகம் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களில் இயக்கத்தின் வெற்றிகரமாக அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ள...