இந்தியா, மே 7 -- விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டால் விருதுநகர் மாவட்ட அதிமுகவை சேர்ந்த 1000 இளைஞர்கள் யுத்த களத்தில் துப்பாக்கி ஏந்தி போராட தயாராக உள்ளோம். போர்க்களத்தில் போரிட இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடுவதற்கான 10 நாட்கள் இடைப்பட்ட பயிற்சி பெற்று எனது தலைமையில் போர்க்களத்தில் போரிட 1000 இளைஞர்கள் தயாராக உள்ளனர்.

பயங்கரவாதத்திற்கு எதிராக நடக்கும் இந்த யுத்தத்தில் அதிமுகவின் பங்கு நிச்சயம் இருக்கும். அதிமுகவினர் தேசத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்பதற்கு அடையாள...