இந்தியா, மார்ச் 16 -- காழ்புணர்ச்சியும், வெறுப்பும் இல்லை.வார்த்தை தடுமாறி இருந்தால் அதற்காக என் வருத்ததை பதிவு செய்கிறேன் என திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார்.

சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தவெக தலைவர் விஜய் நடத்திய ரமலான் நோன்பு நிகழ்ச்சியை விமர்சித்து பேசினார். அப்போது "நோன்பு திறக்க வருகிறானாம். அவனோடு நாலு பாய் நிற்கிறான். ஏன் பாய் இது நியாமா என கேட்டேன். அதற்கு 'எல்லா இடத்திலும் நாங்கள் நாலு நாலு பேர் இருப்போம்' என்றான். இதற்கு எச்சை சோறு துன்னலாண்டா என்றேன்" என அவர் பேசினார்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் வீடியோ சமூகவலைத்தளங்களி வைரல் ஆன நிலையில், பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக தனது 'எக்ஸ்' வலைத்தளத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ...