இந்தியா, ஏப்ரல் 27 -- நடிகை ஸ்ருதிஹாசன் தன்னுடைய கடந்த கால உறவுகள் குறித்து பொதுவெளியில் பெரிதாக எதுவும் பேசிக்கொண்டது கிடையாது. இன்ஸ்டாவில் பார்ட்னருடன் போட்டோ மற்றும் வீடியோ போடுவதுடன் நிறுத்திக்கொண்டார். முதலில் மைக்கேல் கோர்சேல் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர் பின்னர் டாட்டூ கலைஞரான சாந்தனு ஹசாரிகா உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். கடந்த வருடம் ஹசாரிகா உடனான உறவையும் அவர் முறித்துக்கொண்டார்.

இந்த நிலையில் அண்மையில் ஃபிலிம் ஃபேர் நிறுவனத்திற்கு பேட்டிக்கொடுத்த அவர், இந்த உறவு முறிவுகள் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, 'நான் சிலரை காயப்படுத்தி இருக்கிறேன். நான் அதைச் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன். மற்றபடி எனக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை. பராவாயில்லை. நான் ஒரு கோமாளிதான். பார்த்துக்கொள்ளலாம்....