இந்தியா, ஏப்ரல் 21 -- குட் பேட் அக்லி படத்தில் தன்னுடைய பாடல்களை பயன்படுத்தியதற்காக இளையராஜா அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இந்த விவகாரம் குறித்து இளையராஜாவின் சகோதரரும், இயக்குநருமான கங்கை அமரன் பேசி இருக்கிறார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், 'இளையராஜா தனது பாடல்களுக்கான ராயல்டி தொங்கையை கேட்பது குறித்து கேட்கிறீர்கள், நாங்கள் இது சம்பந்தமான விவகாரத்தில் உலக அளவில் இருக்கும் விதிமுறையை பின்பற்றி வருகிறோம். இந்தியாவிலும் இந்த விதிமுறையானது வந்துவிட்டது.

மேலும் படிக்க | Good Bad Ugly Update: குட் பேட் அக்லி பாடல்களில் இளையராஜாவுக்கு ராயல்டியா? - காப்புரிமை சட்டம் சொல்வதென்ன? - விளக்கம்!

இதனைகொண்டு வந்தது பிரபல இசைக்கலைஞர் மைக்கேல் ஜாக்சன். அது தற்போது எல்லா இடத்திற்கும் பரவி விட்டது. க...