சென்னை, ஆகஸ்ட் 12 -- சர்வதேச இளைஞர்கள் தினத்தையொட்டி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டின் விடியலுக்காக, இளைஞர்களால் உருவான பேரியக்கம், திராவிட முன்னேற்றக் கழகம். இந்திய வரலாற்றிலேயே இளைஞர் அணியை உருவாக்கிய முதல் அரசியல் இயக்கமும் நம் கழகம்தான். இளைஞர்களால் உருவாகி, இளைஞர்களோடு பயணித்து, எதிர்கால இளம் சமுதாயம் கல்வி - வேலைவாய்ப்பு -பொருளாதார சமநிலை பெற தொடர்ந்து போராடும் பேரியக்கத்தின், இளைஞர் அணிச் செயலாளர் என்ற முறையில், தமிழ்நாட்டின் நாளைய தலைவர்கள் அனைவருக்கும் #InternationalYouthDay வாழ்த்துகள்!

இளம் தலைமுறையின் கனவுகள் நனவாக, மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நம் #திராவிடமாடல் அரசு என்றும் துணை நிற்கும். எதிர்காலம் நமக்கானது. உயர்ந்த கனவுகளோடு...