இந்தியா, மே 10 -- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை பறிக்கப்பட்ட நிலையில் திமுக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து துரைமுருகன் மாற்றப்படுகிறாரா என கேள்வி எழுந்து உள்ளது.

மேலும் படிக்க:- 'இந்தி தெரியாததால் 10,000 கோடி ரூபாய் இழந்தேன்!' ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் பரபரப்பு பேட்டி!

துரைமுருகன், தமிழக அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்ட மூத்த தலைவர்களில் ஒருவர். வேலூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர், சட்டப் பட்டம் பயின்று திமுகவின் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர். 1971ஆம் ஆண்டு முதல் காட்பாடி மற்றும் ராணிப்பேட்டை தொகுதிகளில் போட்டியிட்டு வரும் துரைமுருகன் இதுவரை 2 தேர்தல்களில் மட்டுமே தோல்வி அடைந்து உள்ளார். 1989 முதல் திமுக ஆட்சி அமைத்த அனைத்து தேர்தல்களிலும் அமைச்சரவையில் பங்கேற்றவர். பொதுப்பணி, நீர்வளம், சட்டம், ச...