கடலூர்,புதுச்சேரி,எம்.புதூர், ஏப்ரல் 2 -- புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மொட்டை விஜய் என்பவர் பிரபல ரவுடி. இவர் மீது தமிழகம் மற்றும் புதுவையில் 33 கொள்ளை மற்றும் கொலை வழக்குகள் உள்ளன. நேற்று இரவு விழுப்புரம் -நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் லாரிகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த லாரி ஓட்டுனர்களை வெட்டி பணம் மற்றும் செல்போன் பறித்த வழக்கில் அவரை பிடிக்க முயன்ற போது, போலீசாரை தாக்கியதாக கூறி, மொட்டை விஜய் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

மேலும் படிக்க | 'தென்ன மரத்துல ஒரு குத்து.. பனமரத்துல ஒரு குத்து..' காங்கிரஸூம் கச்சத்தீவு தீர்மானமும்!

லாரி ஓட்டுனர்களை தாக்கிய சம்பவம், இன்று காலை தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே சட்டம்ஒழுங்கு தொடர்பான கடுமையான விமர்சனங்களை அரசு சந்தித்து வரும் நிலையில், வழிப்பறி சம்பவம், கடும் அதிர்வலைய...