இந்தியா, பிப்ரவரி 26 -- ஸ்ரேயா கோஷல்: இப்படி ஒரு ஐட்டம் பாட்டை பாட வெட்கப்படுகிறேன் என பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் கருத்துரைத்து இருக்கிறார்.

சினிமாவில் வரும் ஐட்டம் பாடல்கள், அதைப் பார்க்கும் பெண்களுக்கு சற்று சங்கடமாக இருக்கும். பாடல்களின் வரிகளும், கதாநாயகிகள் போடும் ஸ்டெப்ஸும் அட்டகாசமாக இருக்கிறது என்று பாடல் ஹிட்டாகும்போது சொன்னாலும் அது பிற்காலத்தில் கேட்கும்போது தர்மசங்கடத்தைத் தான் தருகின்றன.

அதுபோன்ற ஒரு பாடலை பாடிய பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், அப்படி ஒரு பாடலை பாடியதற்கு, இப்போது மிகவும் வெட்கப்படுவதாகக் கூறுகிறார். மேலும் அதன் அர்த்தம் தெரியாமல் குழந்தைகள் பாடுவது சரியல்ல என்றும் அவர் வேதனைத் தெரிவித்து இருக்கிறார்.

இந்தியாவின் பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷல், 2012ஆம் ஆண்டு வெளியான, பாலிவுட் திரைப்படமான ஹிருத்திக் ரோஷன் நடித்த அக்னி ...