சென்னை,கோவை,chennai,Coimbatore, மார்ச் 17 -- தமிழக பட்ஜெட் சட்டமன்ற கூட்டத் தொடரில், இன்று சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக கொண்டு வந்தது. சபாநாயகரை நீக்கக் கோரி நடந்த விவாதத்தில், அதிமுகவின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் விவாதத்தில் ஈடுபட்டடார். ஆனால், அவருடைய விவாதங்கள், பட்ஜெட் கூட்டத் தொடர் நேரலையில் முழுவதும் துண்டிக்கப்பட்டது.

மேலும் படிக்க | 'அப்பாவு ஒன்சைடாக நடக்கிறார், கிண்டலடிக்கிறார்' புகார் கூறிய எடப்பாடி பழனிசாமி.. பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

சபாநாயகர் மீதும், அவரது செயல்பாடுகள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனங்களை முன் வைத்த நிலையில், அவை அனைத்தும் ஒளிபரப்பில் காட்டப்படவில்லை. 'பேரவைத் தலைவர் பெரும்பாலான சமயங்களில் ஒருத...