இந்தியா, மே 6 -- மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழகத்தில் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொடர் கொலைகள் மற்றும் ஜாதி மோதல்கள் பதிவாகியுள்ளன. இதனைச் சுட்டிக்காட்டி, அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க:- 'மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்படும் மதுரை ஆதீனத்தை பதவிநீக்கம் செய்ய வேண்டும்' இந்து மக்கள் கட்சி கோரிக்கை!

எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் வலைதள பதிவில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவான முக்கிய சம்பவங்களைப் பட்டியலிட்டு, ஸ்டாலின் ஆட்சியின் தோல்வியை வெளிப்படுத்தினார். அவை:

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி சர...