புதுச்சேரி,காரைக்கால், மார்ச் 12 -- புதுச்சேரியில் இனி வாரத்தில் அனைத்து பள்ளி நாட்களிலும் மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை வழங்கப்படும் என்றும், அரசு இட ஒதுக்கீட்டில் உயர் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும் என்று புதுச்சேரி அரசின் பட்ஜெட்டில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டமன்றத்தில் ரூ 13 ஆயிரத்து 600 கோடிக்கான வரியில்லா பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள் இதோ:

அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தில் வாரம் 3 முட்டைகள் வழங்கப்படுகிறது. இனி வாரத்தில் அனைத்து பள்ளி நாட்களிலும் முட்டை வழங்கப்படும். 6 முதல் 12 வரை அரசு பள்ளியில் பயின்று இளநிலை கல்வி படிக்கும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதத்தோறும...