இந்தியா, பிப்ரவரி 25 -- இந்தி திணிப்பு எதிர்ப்பு குறித்து திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், "நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் தொடர் மடல். ஆம்.. இது ஒரு தொடர்ச்சியான போராட்டம். பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் அறவழிப் போராட்டம்.

அன்னைத் தமிழை ஆதிக்க மொழியிடமிருந்து பாதுகாக்கின்ற போராட்டம். இனத்தின் அடையாளத்தைத் தக்கவைத்து, தாய்மொழியைக் காலத்திற்கேற்ற அறிவியல் தொழில்நுட்பத் தன்மையுடன் வளர்த்தெடுக்கும் போராட்டம். 85 ஆண்டுகளுக்கும் மேலாக சளைக்காமல் தொடரும் வெற்றிகரமான போராட்டம். அதுதான் தமிழர்களின் உணர்வுடன் கலந்துள்ள இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம்!

இந்தியை அவர்கள் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம...