இந்தியா, மார்ச் 27 -- "இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா" என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், தமிழகத்தில் அதிமுகவின் "திண்ணைப் பிரச்சாரம்" மற்றும் எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய டெல்லி பயணம் குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கடுமையாக விமர்சித்ததுடன், எடப்பாடி பழனிசாமியை "தமிழகத்தின் இரும்பு மனிதர்" என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை "இந்தியாவின் இரும்பு மனிதர்" என்றும் புகழ்ந்து பேசியுள்ளார்.

"அம்மா பேரவையின் சார்பில் 7-வது வார திண்ணைப் பிரச்சாரம் நாளை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதில் திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வே...