சென்னை, ஏப்ரல் 29 -- 'திமுக ஆட்சியில் தமிழ்நாடு தலை நிமிர்ந்து இருக்கிறதா? இல்லையா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். பார்ட் 2 எப்போதும் வெற்றி பெற்றதில்லை' என்று அதிமுக சட்டமன்ற துணைத் தலைவர் ஆர்.பி.உதயக்குமார் பேசியுள்ளார்.

மேலும் படிக்க | 'அதிமுக-பாஜக கூட்டணியில் டிடிவி, சசிகலா?' டெல்லியில் அமித்ஷா உடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், 'தமிழகம் தலை நிமிர்ந்து இருப்பதாகவும், தமிழக மக்கள் 2026ல் வெர்சன் 2.O பார்க்கப் போவதாகவும்,' பதிலளித்தார். முதல்வரின் பேச்சு குறித்து பேசிய சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயக்குமார், 'பார்ட் 2 என்பது தோல்வியையே தழுவும்' என்று விமர்சித்தார். இந்தியன் படம் ஓடியது போல, இந்தியன் 2 ஓடவில்லை என்று கூறிய ஆர்.பி.உதயக்...