இந்தியா, ஜூன் 19 -- கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் தாமதமாக வெளியிட உச்ச நீதிமன்றம் வழி வகுத்திருக்கலாம். ஆனால், அதில் எந்த விதமான வணிக பயனும் கிடையாது என்று விநியோகஸ்தகர் ஒருவர் பேசி இருக்கிறார்.

கமல்ஹாசன் நடித்து, மணி ரத்னம் இயக்கிய 'தக் லைஃப்' திரைப்படம் கடந்த ஜூன் 5 அன்று வெளியானது. இதற்கிடையே நடந்த அந்தப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில், கமல் கன்னட மொழி குறித்து பேசியது சர்ச்சையானது. இதற்காக அவர் மன்னிப்புக்கேட்க வற்புறுத்தப்பட்டார்.

ஆனால், அவர் மன்னிப்புக் கேட்க மறுத்து விட்டார். இந்த நிலையில் கர்நாடகா வர்த்தக சபை கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியிட தடை விதித்தது. இதனை எதிர்த்து கமல்ஹாசன் கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடினார்.

அங்கும் அவர் மன்னிப்புக்கேட்க வற்புறுத்தப்பட்டார். ஆனால், அதன்பின்னரும் கமல்ஹாசன் ம...