இந்தியா, மே 7 -- தமிழ்நாட்டில் நடக்கும் சாதிய ஆவணக் கொலைகள் குறித்தும் அவை நாளுக்கு நாள் மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் பேசிய திரைப்படம் கௌரவம். 2013 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ராதா மோகன் இயக்கியிருப்பார். சிரீஷ், யாமி கௌதம், பிரகாஷ் ராஜ், குமரவேல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருப்பார்.

கௌரவம் படம்

இந்தப் படத்தின் வெளியீட்டின் போது, விஜய் தொலைக்காட்சியில் சிறப்பு நீயா நானா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், படக்குழு சார்பில் பிரகாஷ் ராஜ் பங்கேற்றார். அவருடன் சிறப்பு அழைப்பாளராக இயக்குநரும் நடிகருமான சேரன் பங்கேற்று சாதிய அடக்குமுறைகள், சாதிய வெறி குறித்த தங்கள் கருத்துகளை பகிர்ந்திருப்பர்.

மேலும் படிக்க| இங்கு நிறைய விஷயங்கள் நடந்துவிட்டன.. 3 வாரங்களுக்கு பின் பேசிய குஷ்பு.. என்ன நடந...