இந்தியா, மார்ச் 13 -- அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இருமகன்களும் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளை படித்ததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன்கள் படித்தது இரு மொழி கல்வி திட்டமா? மும்மொழிக் கல்வித் திட்டமா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார்.

மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், இதற்கு பதிலளித்தார். 34 அமைச்சர்களின் பசங்க எங்கு படிக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. 8 கோடி மக்களுக்கு என்ன கொள்கை என்பதுதான் வாதம். எனக்கு உள்ளது இரண்டு புதல்வர்கள். அவர்கள் இருவரும் எல்கேஜி முதல் பள்ளி முடிக்கும் வரை இரட்டை மொழிக் கொள்கைதான் படித்தார்கள்.

கல்வித்திட்டத்தை பொறுத்தே மொழிக் கொள்கை அமைகிறது. சிபிஎஸ்சியில் 3 மொழிக் கொ...