இந்தியா, மே 12 -- திருப்பூரில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாமன் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட சூரி திடீரென்று கண்கலங்கினார்.

அதில் அவர் பேசும் பொழுது, 'நான் பட்ட கஷ்டத்திற்கு இதைவிட பெரிய மரியாதை கிடைக்கவே கிடைக்காது. திருப்பூர் சுப்ரமணியம் அண்ணனுடைய திரையரங்கிற்குள் நுழைந்தவுடன் எனக்கு பழைய நினைவுகள் அனைத்தும் நினைவுக்கு வந்துவிட்டன. இந்த இடத்தில் தானே நாம் அலைந்து இருக்கிறோம் என்று தோன்றியது.

இங்கு நான் நடக்காத இடமே கிடையாது. நான் இங்கே வந்த பொழுது, என்னை சிவப்பு கம்பளம் விரித்து அழைத்து வந்த போது, நீங்கள் எல்லோரும் கைதட்டி விசில் அடித்து, மேடையில் ஏற்றி என்னை அமர வைத்தது போல இருந்தது. இது உன்னுடைய மேடை இந்த மேடையில் நீ நிற்காமல் வேறு யார் நிற்பார்; நீ நில்லுடா.. நாங்கள் இருக்கிறோம் என்று சொல்வது போல இருந்தது என்று பேசிக்கொண்டிருக்...