இந்தியா, ஏப்ரல் 20 -- "ஆளுநரை 'போஸ்ட்மேன்' என்பவர்கள் ஏன் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ராஜ்பவன் படிகளை மிதித்தார்கள்?" என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடப்பதாகவும், ஆளுநரை 'போஸ்ட்மேன்' என்று விமர்சிக்கும் திமுக, எதிர்க்கட்சியாக இருந்தபோது ராஜ்பவனுக்கு சென்று கோரிக்கை வைத்தது ஏன் எனவும், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் குடிநீர் மாசு, பள்ளிகளில் வன்முறை, சமூக அநீதி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்வு காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பாஜகவின் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை, "திமுக ஆளுநரை 'போஸ்ட்மேன்' என்று கூறி உள்ளது. ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தபோது, அவர்கள் ஏன் ஆளுநர் மாள...