இந்தியா, ஏப்ரல் 18 -- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்கள் உடன் தற்போதிய பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆனந்தனுக்கு தொடர்பு இருப்பதாக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி குற்றம்சாட்டி உள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) மாநில தலைவர் பி. ஆனந்தனுக்கு எதிராக, முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்தன் தன்னை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியது தொடர்பாகவும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவரது செயல்பாடுகள் குறித்தும் பொற்கொடி தனது நேர்காணலில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

பொற்கொடி தனது பேட்டியில், "ஆனந்தன் ஆரம்பத்திலிருந்தே மாநில பொறுப்பாளர்களை எந்தவித காரணமும் கூறாமல் நீக்கி வந்தார். அவரது தவறான செய...