இந்தியா, மார்ச் 1 -- "ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, அன்னைத் தமிழைக் காப்பேன்!" என தனது பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை ஏற்றுள்ளார்.

தமிழ்நாடு காட்டுகின்ற பாதையே ஒவ்வொரு மாநிலமும் தன் தாய்மொழியைக் காப்பதற்கான பாதை. ஆதிக்க மொழிகளை அடையாளம் கண்டு, அவற்றின் வலையில் வீழாமல் தடுத்துப் பயணிக்கும் பாதை என்பதை பஞ்சாப், தெலுங்கானா மாநில அரசுகளின் அறிவிப்பு உறுதி செய்திருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தை ஆள்கின்ற 'ஆம் ஆத்மி' கட்சி அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், தனது மாநிலத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியை முதன்மையாகவும் கட்டாயமாகவும் கற்றுத் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தை ஆள்கின்ற காங்கிரஸ் அரசின் சார்பில் வெளியாகியுள்ள உத்தரவிலும், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு மொழியைக் கட்ட...