சென்னை,புதுச்சேரி, ஏப்ரல் 1 -- தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகளை மணந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. விசிக.,வில் இருந்து தவெகவில் இணைந்த அவர், பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்து விஜயை சந்திக்க செய்ததுடன், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூகப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் படிக்க | 'பதவி, பணப் பேராசை.. நீதிமன்றம் போவேன்..' ஆதவ் அர்ஜூனாவுக்கு மார்ட்டின் மகன் சூடான அறிக்கை!

அதன் எதிரொலி தான், தவெக.,வின் 2 ம் ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர் தோன்றியதும், அவர் அடுத்தடுத்து அளித்த பேட்டிகளும். விஜய்யின் நகர்வுகளை தீர்மானிப்பவராக பிரசாந்த் கிஷோர் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. பிரசாந்த் கிஷோருக்கும் விஜய்க்கும் பாலமாக இ...