இந்தியா, மே 1 -- இயக்குநர் மற்றும் நடிகர் சேரன் தவமாய் தவமிருந்து படம் எடுக்கப்பட்ட விதம், ஆட்டோகிராஃப் திரைப்படம் எடுக்கப்பட்ட விதம் வேஸ்ட் பேப்பர் யூடியூப் சேனலில் கொடுத்த பேட்டி வைரல் ஆகி வருகிறது. சேரன் பேசி, 28 அக்டோபர் 2019ஆம் ஆண்டு வெளியான பேட்டியின் தொகுப்பினைக் காணலாம்.

என்னுடைய படங்களைப் பொறுத்தவரை, ஒரு ஹீரோன்னு ஒருத்தன் இருக்கமாட்டான். ஒரு இடத்தில் ஹீரோவாக இருப்பான். ஒரு இடத்தில் வில்லனாகக் கூட இருப்பான். தவறு செய்வான், ஒரு இடத்தில் ஏமாத்துவான். இது எல்லாமே மனிதருக்கான குணாதிசியம். அப்படி இருக்கும்போது நான் ஒரிஜினலாக ஒரு அப்பாவைப் பண்றேன். அப்பா தியாகமும் பண்ணுவார். கடனுக்கும் அழைவார். கடனைக்கொடுக்க யோசிப்பார். பின்னர், மகன்களிடமும் பாரபட்சம் பார்ப்பார். பையன்களிலும் ஒருத்தனுக்கு செய்யமுடியும், ஒருத்தனுக்கு செய்யமுடியாமல் போய்...