இந்தியா, செப்டம்பர் 8 -- முதலீடு பயணத்தை முடித்து இந்தியா திரும்பிய முதல்வர் ஸ்டாலின், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

''ஒரு வாரகாலமாக ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை நான் மேற்கொண்டேன். மன நிறைவோடு திரும்பியிருக்கிறேன். இந்த பயணத்தைப் பொருத்தவரை மாபெரும் வெற்றிப் பயணமாக அமைந்திருக்கிறது. மொத்தம், 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மூலமாக, 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய வகையில், 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மீது நம்பிக்கை வைத்து 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு முன்வந்து இருக்கிறார்கள். உயர்கல்வி, சிறுதொழில் போன்ற துறைகளில் ஆறு அமைப்புகள் நம்முடன் இணைந்து கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் 17 நிறுவனங்களும், ...