இந்தியா, பிப்ரவரி 23 -- அளவோடு குழந்தை பெற்றுக்கொண்டதால்தான் இன்றைக்குத் தொகுதி மறுசீரமைப்பு வருகிறபோது, நாடாளுமன்றத் தொகுதிகள் குறைக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

சென்னை, கொளத்தூரில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்லத் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தத் திருமணத்தை பொருத்தவரையில், இதை நம்முடைய வீட்டுத் திருமணமாகக் கருதி இந்த மணவிழா நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவதற்காக வந்திருக்கிறேன். உங்களோடு சேர்ந்து நானும் மணமக்களை வாழ்த்துகிறேன். புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லி இருக்கும், "வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய்" இருந்து மணமக்கள் வாழ்க... வாழ்க என்று வாழ்த்துகிறேன்...