Chennai, ஏப்ரல் 30 -- இன்றைய இளைஞர்கள் நமது கலாசார பெருமையை பற்றிய அறிவில்லாமல் மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றுகிறார்கள் என நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சியொன்றில் காணொலி மூலம் பேசியிருக்கிறார். தற்போது அதுதொடர்பான செய்தி வைரல் ஆகியிருக்கிறது.

இதுதொடர்பாக, ஸ்ரீதயா ஃபவுண்டேசனுக்காக, சங்கல்பம் என்னும் தலைப்பில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

மேலும் படிக்க: 'ஜனநாயகன் ரொம்ப பிரமாண்டமாக வந்திட்டு இருக்குது': நடிகை பூஜா ஹெக்டே வெளிப்படை பேட்டி!

அந்த வீடியோவில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது, ''இப்போது இந்த செல்போன் யுகத்தில் இளைஞர்கள் ஏன் பெரியவங்க கூட, நம் பாரத நாட்டின் மகோன்னதமான சம்பிரதாயம், அதனுடைய கலாசாரம், அருமை, பெருமை எல்லாம் வந்து, அவங்களுக்குத் தெரியாமலேயே ஒரு அறிவு இல்லாமலேயே மேற்கத்திய கலாசாரத்துக்கு நம் இளைஞர்கள் ப...