இந்தியா, மார்ச் 7 -- விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று பாடி வரும் சிறுவன் விஷ்ணு, தங்கள் கிராமத்தில் குடிநீர் பிரச்னை இருந்ததாக ராகவா லாரன்ஸிடம் எடுத்துரைத்தார்.

அவரது கோரிக்கையை ஏற்ற நடிகர் ராகவா லாரன்ஸ் புதுக்கோட்டை மாவட்டம், குக்கனாம்பட்டியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துக்கொடுத்தார். அதன்பின் அதனை நேரில் பார்க்க அவ்வூர் சென்ற ராகவா லாரன்ஸ்க்கு ஊர் மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ராகவா லாரன்ஸ் கூறுகையில், ''விஷ்ணு என்கிற பையன் ரொம்ப நல்லா பாடியிருப்பார். பாடுறது மட்டுமில்லாமல் ஒரு கோரிக்கை வைச்சார். எங்க ஊரில் தண்ணீர் சரியில்லை. கிணத்து தண்ணீர் தான் எடுத்துக் குடிக்கிறோம். அப்படி குடிக்கும்போது நிறைய நோய்கள் எல்லாம் வருது. கிணற்றில்கூட தண்ணீர் ...