அமெரிக்கா,உக்ரைன்,ரஷ்யா, பிப்ரவரி 4 -- ரஷ்யாவுடன் நடக்கும் போரில் அமெரிக்காவின் ஆதரவு தொடர, உக்ரைன் தனது நாட்டில் கிடைக்கும் அரிய மண்வளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். 'ஓவல் அலுவலகத்தில்' செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், உக்ரைனுக்கு தனது ஐரோப்பிய கூட்டாளிகளை விட அதிகளவில் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளதாக,' அப்போது டிரம்ப் கூறினார். அவர் மேலும் கூறுகையில், ''நாம் உக்ரைனுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறோம். அதன்படி, நாம் அவர்களுக்கு வழங்கும் அனைத்து உதவிகளுக்கும் பதிலாக அவர்கள் தங்கள் அரிய மண்வளங்களை நமக்கு வழங்க வேண்டும்'' என்று அப்போது டிரம்ப் தெரிவித்தார்.

உக்ரைன் அரசாங்கத்திடம் இருந்து, நவீன உயர் தொழில்நுட்ப பொருளாதாரத்திற்கு ம...